ஆர்கானிக் vs இயற்கை அழகு பொருட்கள்: வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

லேபிள்கள் மற்றும் பொருட்களைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அழகு உலகம் குழப்பமாக இருக்கும். இதோ சில உதவிகள்.

skincare-tips
Know the difference Organic vs natural beauty products

அழகுத் துறை ஒவ்வொரு நாளும் கூடுதல் புதிய வெளியீடுகளுடன் பல தயாரிப்புகளை வழங்குகிறது. ஆனால் சமீபத்தில், இயற்கை அழகு பற்றி நிறைய உரையாடல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக எஸ்எல்எஸ் (SLS), பாராபின்(parabens) மற்றும் பாத்தலேட்ஸ் (phthalates) போன்ற நச்சுப் பொருட்கள் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவது முக்கியமாக அடங்கும்.

ஆனால் அதற்குள் இரண்டு வகையான தயாரிப்புகள் உள்ளன – இயற்கை (natural) மற்றும் ஆர்கனிக் (organic) – இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் செயல்திறனையும் அறியலாம். எந்த அழகுப் பொருளை வாங்கும் முன் இவை கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு மிக முக்கியமான காரணிகள்.

உங்களுக்காக இதை எளிமையாக்க, கரோலின் கோம்ஸ், ரீவீஸ் கிளைவ் நிறுவனர், இரண்டையும் டிகோட் செய்கிறார். படிக்கவும்.

இயற்கை பொருட்கள் என்றால் என்ன?

இயற்கையான பொருட்கள் இயற்கையிலே உருவாகும் அல்லது தாவரங்கள், கடல், நுண்ணுயிரிகள், பூஞ்சை, பாக்டீரியா அல்லது விலங்குகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து பெறப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.

“இயற்கை’ என்ற சொல், அழகுசாதனத் துறையில் கட்டுப்படுத்தப்படவில்லை. ‘இயற்கை'(natural) மற்றும் ‘அனைத்து-இயற்கை’ (all-natural) பொருட்களைக் கொண்ட ஒரு தயாரிப்பு நல்லது என்றாலும், ஒழுங்குமுறை இல்லாததால் அடையாளம் காண்பது கடினமாகிறது,” என்று கோம்ஸ் கூறினார்.

ஒரு தயாரிப்பு இயற்கையானது என்று கூறும்போது, ​​லேபிளில் ”அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு” அமைப்பு இருந்தால் தவிர, அது அவ்வாறு இருக்காது.

“இயற்கை பொருட்களில் சல்பேட் (SLS/SLES), சிலிகான் (டைமெதிகோன், சைக்ளோமெதிகோன் போன்றவை), பாராபின்ஸ், பாத்தலேட்டுகள், BHT, DMDM, மினரல் ஆயில், பெட்ரோலியம் துணை தயாரிப்புகள் போன்ற நச்சுகள் இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

ஆர்கானிக் பொருட்கள் என்றால் என்ன?

ஆர்கானிக் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் அல்லது செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

இயற்கையான பொருட்களைப் போலவே இதில் செயற்கை நிறம்/நறுமணம் அல்லது சல்பேட், பாராபின்ஸ் மற்றும் சிலிகான் போன்ற இரசாயனங்கள் இல்லை.

“இருப்பினும், ஆர்கானிக் என்ற சொல் கட்டுப்பாடற்றது அல்ல, மேலும் பொருட்கள் மற்றும் தயாரிப்புக்கு’ ஆர்கானிக் சான்றிதழை வழங்கும் சுயாதீன சான்றிதழ் அமைப்புகளைக் கொண்டுள்ளது,” என்று அவர் indianexpress.com இடம் கூறினார். 

“தயாரிப்புகளில் ‘ஆர்கானிக்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, COSMOS/ ECO- சான்றளிக்கப்பட்ட அல்லது USDA சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் என்பதைத் தேடுங்கள் என்று கோம்ஸ் கூறினார்.

ஆர்கானிக் சான்றளிக்கப்பட்ட முத்திரையுடன் கூடிய தயாரிப்பு லேபிள்’ குறைந்தபட்சம் 70 சதவீத சான்றளிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Know the difference organic vs natural beauty products

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com