scorecardresearch

தள்ளு வண்டியில் ஆரம்பித்த பயணம்… சவுகார்பேட்டையில் உங்களை சுண்டி இழுக்கும் நெய் ஊத்தப்பம்!

1970களில் தள்ளு வண்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த கடை, சவுகார்பேட்டையில் சுவையான சூடான நெய் ஊத்தபங்கள், இட்லிகளை விற்பனை செய்து வருகிறது.

தள்ளு வண்டியில் ஆரம்பித்த பயணம்… சவுகார்பேட்டையில் உங்களை சுண்டி இழுக்கும் நெய் ஊத்தப்பம்!
சீனா பாயின் டிபன் சென்டர் (Express Photo)

வித்யா கவுரி வெங்கடேஷ்

Know your city: 1970களில் தள்ளு வண்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த கடை, சவுகார்பேட்டையில் சுவையான சூடான நெய் ஊத்தபங்கள், இட்லிகளை விற்பனை செய்து வருகிறது.

தனது பெற்றோரின் தள்ளு வண்டியை மிகவும் விலைமதிப்பற்ற உடைமை என்று சிவபிரசாத் கூறுகிறார்.  தானும் தனது மூன்று சகோதரர்களும் தங்கள் வீட்டின் முன் தள்ளு வண்டியை நிறுத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.

“நாங்கள் எப்படி ஆரம்பித்தோம் என்பதை நாங்கள் மறக்க விரும்பவில்லை, அதனால்தான் எங்களிடம் இன்னும் இந்த தள்ளு வண்டி உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

சென்னையில் உள்ள சவுகார்பேட்டைக்கு செல்லும் எவரும், மின்ட் ஸ்ட்ரீட்டில் இருக்கும் பல்வேறு விதமான  உணவுகளை முயற்சி செய்ய தவற மாட்டார்கள்.

என்.எஸ்.சி. போஸ் ரோட்டின் சாண்ட்விச்கள், ககட ராம்பிரசாத்தின் ஜிலேபி, மேத்தா பிரதர்ஸ் வடை பாவ் மற்றும் பிற வட இந்திய தின்பண்டங்களுக்கு பெயர் பெற்ற சவுகார்பேட்டையில் ஒரு சிறிய உணவகம் உள்ளது.\

‘சீனா பாய் டிஃபன் சென்டர்’ என்ற இந்த கடை, முதலில் தள்ளு வண்டி உத்தபம் கடையாக ஆரம்பித்தது. ஆனால் தற்போது சென்னையின் மையமாகக் கருதப்படும் சவுகார்பேட்டை மற்றும் சில பகுதியில் மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு சிவபிரசாத்தின் பெற்றோர்களான சத்தியவதி அம்மாள் மற்றும் சீனிவாச நாயுடு, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியிலிருந்து மெட்ராஸ்க்கு (இப்போது சென்னை) குடிபெயர்ந்தார்கள்.

சீனா பாய் டிஃபன் சென்டரால் வழங்கப்படும் நெய் இட்லிகளில் மசாலா தாளிக்கப்படுகிறது.

மேற்கு இந்தியாவிலிருந்து மார்வாரிகள் மற்றும் குஜராத்திகள், சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் பெருமளவு குடிபெயர்ந்துள்ளனர். பணம் சம்பாதிப்பதற்காக சென்னைக்கு வந்த அவர்கள், இறுதியில் குடும்பத்துடன் இங்கேயே குடியேறினர். சீனிவாச நாயுடு தனது வாடிக்கையாளர்களால் அன்புடன் சீனா பாய் என்று அழைக்கப்பட்டார், அதனால் இப்பெயரையே தன்னுடைய மெஸ்-க்கு வழங்கினார்.

சீனா பாய் டிஃபன் சென்டரின் உரிமையாளரும் பராமரிப்பாளருமான சீனிவாசாவின் மூத்த மகன் சிவபிரசாத், “எங்கள் சொந்த வாடிக்கையாளர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட பெயர் இது”, என்று கூறினார்.

சிவபிரசாத்தின் வழக்கத்தை பற்றி அவர் கூறியதாவது: அவர் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து, உணவகத்திற்கு புதிய மளிகைப் பொருட்களை வாங்க சந்தைக்குச் செல்கிறார். காலை 9 மணிக்குள் முழு குடும்பமும் காய்கறிகளை வெட்டுவது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, மாலை 6 மணிக்கு வியாபாரத்தை தொடங்கும் முன் கடையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். சீனா பாய் அனைத்து இட்லி மற்றும் தோசை பிரியர்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மேலும், “நான் டிபன் ஸ்டால் தொடங்கியதிலிருந்து என் பெற்றோருடன் இருந்தேன். 1996-ல் அப்பா இறந்த பிறகு தொழிலை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். 1999 வரை தள்ளு வண்டியில் ஊத்தாபமும், இட்லியும் செய்து விற்றேன். 2000 ஆம் ஆண்டில், வீட்டில் உள்ள அனைத்து பெண்கள், என் சகோதரர்கள் மற்றும் எனது நண்பர்கள் சிலரின் உதவியுடன், என்.எஸ்.சி. போஸ் சாலையில் 50 சதுர அடி கடையை வாடகைக்கு எடுத்தேன், இன்றும் நாங்கள் இங்குதான் கடை நடத்தி வருகிறோம்”, என்று சிவபிரசாத் கூறுகிறார்.

சீனா பாய் டிபன் சென்டரின் நிறுவனர்கள் சீனிவாச நாயுடு மற்றும் சத்தியவதி அம்மாள்.

சீனா பாய் கடையில் மக்களால் மிகவும் விரும்பப்படும் உணவு எதுவென்று கேட்டதற்கு தோசை மற்றும் இட்லி என்று கூறினார். இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, “எனது வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க நான் மத ரீதியாக மூன்று விஷயங்களைப் பின்பற்றுகிறேன். உணவுக்காக என்னிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் நான் மதிக்கிறேன். நான் செய்யும் உணவு அவர்களின் விருப்பத்திற்கேற்ப இருப்பதை உறுதி செய்கிறேன். மேலும் எனது கடையை எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பேன். இந்த அடிப்படை விதிகளை நாங்கள் பின்பற்றும் போது, ​​வாடிக்கையாளர்கள் எங்களிடம் தொடர்ந்து உணவுண்ண வருவார்கள்” என்று கூறுகிறார்.

1977 இல் சீனா பாய் முதன்முதலில் இந்த தள்ளு வண்டி மூலம் தனது வியாபாரத்தை தொடங்கினர்.

என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கடை எண் 54-யை  நீங்கள் நடந்து செல்லும்போது, ​​​​சூடான தோசை தவாவின் சத்தமும், வேகவைக்கும் இட்லியின் வாசனையையும் உணரலாம். 

சிவபிரசாத் இட்லி/தோசை மசாலாப் பொடியுடன் சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை தவாவில் வறுத்த தோசைகளின் மேல் தூவி, ஒரு கப் நெய்யில் தாராளமாக ஊற்றுகிறார். 

இட்லிகளைப் பொறுத்த வரையில், அதே பொடியைத் தடவி, அதன் மேல் நிறைய நெய் சேர்த்து, வாழை இலையில் சூடாகப் பரிமாறுவார். 45 ஆண்டுகளுக்கு முன்பு 75 பைசாவுக்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.30க்கும் (இரண்டு ஊத்தாபம்) ரூ.60க்கும் (மினி இட்லி 10 துண்டுகள்) என்று விற்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Know your city restaurant that started in 1977 runs in sowcarpet