கொண்டைக்கடலையில் செய்த ரசம். இப்படி ஒரு செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கொண்டைக்கடலை
வெங்காயம் 2
தக்காளி 3
10 பல் புண்டு
2 ஸ்பூன் உப்பு
3 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் சீரகத் தூள்
1 எலுமிச்சை அளவு புளி
எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு- உளுந்தம் பருப்பு
கால் டீஸ்பூன் வெந்தயம்
அரை டீஸ்பூன் சீரகம்
கால் டீஸ்பூன் பெருங்காயம்
வெங்காயம் 1 ஸ்பூன்
செய்முறை : கொண்டைக்கடலையை வறுக்க வேண்டும். தொடர்ந்து குக்கரில் தண்ணீர் சேர்த்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, உப்பு, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் , சீரகத் தூள் சேர்த்து 6 விசில் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து குக்கரை திறந்து அதில் தண்ணீர், உப்பு, புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், வெங்காயம் பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசித்தில் கொட்டவும். சூப்பரான கொண்டைக்கடலை ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil