scorecardresearch

கொடைக்கானலை சுற்றி பார்க்க வெறும் ரூ. 150 போதும்: இத்திட்டம் தொடர்பான முழுத் தகவல்

ரூ. 150-ல் கொடைக்கானலை சுற்றிப் பார்க்கும் வசதியை போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது.

சுற்றுலா கொடைக்கானல்

ரூ. 150-ல் கொடைக்கானலை சுற்றிப் பார்க்கும் வசதியை போக்குவரத்து கழகம்  தொடங்கி உள்ளது.

வெயில் காலம் தொடங்கிவிட்டால், எங்காவது டூர் போகலாம் என்ற எண்ணம் நம்மிடம் எழும். தற்போது வழக்கத்தைவிட அதிக வெயில் அடிப்பாதால், குளிரான இடங்களுக்கு செல்வதை நாம் தேர்வு செய்வோம். இந்நிலையில் இதில் ஊட்டி, கொடைக்கானல் இடம் பெறும். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், கொடைக்கானல் முழுவதும் சுற்றிப் பார்ப்பார்கள். ஆனால் தனியாக வாகனம் வைக்கும் அளவுக்கு வசதியில்லாதவர்கள் பல்வேறு பேருந்துகளில்  ஏறிக்கொண்டு போனதால் சுற்றிப்பார்க்க முடியும்.

இந்நிலையில் இந்த சிரமங்களை குறைக்க ரூ. 150-க்கு கொடைக்கானலை சுற்றுபார்க்கும் திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் காடுகள், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை சுற்றிக் காட்டுவார்கள்.

இதில் பயணிக்கும் குழந்தைகளுக்கு ரூ. 75-தும், பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kodaikanal full tour in rupees 150