இந்த கொள்ளு பருப்பு கடையல் செய்வதும் ஈசிதான். அதே நேரத்தில் உடல் எடை குறைய உதவும்.
தேவையான பொருட்கள்
500 கிராம் கொள்ளு பருப்பு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு தண்ணீர்
3 வத்தல்
3 தக்காளி
கால் ஸ்பூன் மல்லி
கால் ஸ்பூன் சீரகம்
100 கிராம் சின்ன வெங்காயம்
4 பூண்டு
பச்சை மிளகாய் 6
கருவேப்பிலை
தேவையான அளவு உப்பு
செய்முறை : கொள்ளு பருப்பை கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தொடர்ந்து அடுப்பில் குக்கரவை வைத்து மூடியை நீக்கி, அதில் தக்காளி நறுக்கியது, வத்தலை சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து மல்லி, சீரகம் , சின்ன வெங்காயம் நறுக்கியது, கருவெப்பிலை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும். குக்கரில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து மத்து வைத்து கடைந்துகொள்ளவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“