kollu rasam recipes kollu rasam recipe tamil : உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள் :
கொள்ளு - கால் கப்,
Advertisment
Advertisements
புளி - நெல்லியளவு,
தக்காளி - 2,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.