nayanthara saree images : பியூஷன், இண்டோ வெஸ்டர்ன், என பெண்களுக்கு நாளும் புதுப்புது வடிவங்களில் ஆடைகள் வந்தாலும், பாரம்பரிய ஆடைகளுக்கு இருக்கும் மதிப்பே தனி தான். குறிப்பாக நேர்த்தியாக புடவை அணியும் போது, அது அணிபவரை, ஒரே நேரத்தில் அழகாகவும் கம்பீரமாகவும் வெளிப்படுத்துகிறது. அதை நன்கு புரிந்துகொண்ட சில நடிகையர், புடவைகளின் வழி தங்கள் முத்திரையை பதிக்கின்றனர்.
அதில் மிகவும் பிரபலமான ரேகா, வித்யா பாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி, தற்போது நடந்த பல விழாக்களில் கூட, பல நடிகைகள் புடவைகளில் வந்து தான் அசத்தினார்கள். அதில் குறிப்பாக ரேகா, வித்யா பாலன், ஹேமா மாலினி, தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கரீனா கபூர் போன்ற பல நடிகைகள் புடவைகளில் தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஹாலிவுட் நடிகையான ஓப்ரா வின்ஃப்ரே, இந்தியாவிற்கு வந்த போது இந்திய பாரம்பரிய ஆடையான புடவையை அணிந்தார்.
பொதுவாக தற்கால நடிகையர் பலரும், தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது, வெஸ்டர்ன் அல்லது எத்தினிக் ஸ்டைல் ஆடைகளை தான் அதிகம் அணிகின்றனர். ஆனால், ஒரு சிலர் எப்போதும் புடவையையே விரும்பி அணிகின்றனர். இதை அவர்களின் அடையாளமாகவும் மாற்றுகின்றனர். அதில் சில நடிகைகள், ‘புடைவைக்கு ஏற்ற மேட்சிங்’ மற்றும் தங்களை கம்பீரமாக வெளிப்படுத்தும் விதத்தால், அனைவரையும் ஈர்த்து விடுவார்கள்.
சரி தமிழ் சினிமாவில் புடவையில் ஜொலிக்கும் நடிகைகள் யார் யார்? புடவை என்றாலே நயன்தாரா , சமந்தா தானா? இதோ நீங்களே பார்த்து பதில் சொல்லுங்கள்.
1. நயன்தாரா:
படங்களில் மட்டுமில்லை விருது விழாக்களிலும் நயன்தாரா பெரும்பாலும் புடவை அணிந்தே வருவார். காட்டன், சில்க், பட்டு புடவை என இவரின் புடவை ஸ்டைல் வேற லெவலில் இருக்கும். குறிப்பாக காலேஜ் பெண்கள் பலரும் நயன்தாரா ஸ்டைலில் சேலை கட்ட அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-10-300x169.jpg)
2. ஸ்ரீ திவ்யா:
திரையிலும் திரைக்குப் பின்னும் ஸ்ரீதிவ்யா எப்போதுமே அமைதிதான். இருப்பினும் தன் ஆடைகளால் அட்ராசிட்டி செய்துவிடுவார். பொதுவாகவே புடவை தேர்விலும், டிசைனர் புடவைகளைக் காட்டிலும் சில்க் புடவைகளையே அதிகமாக தேர்வு செய்கிறார். அதிலும் பழைய மாங்காய் டிசைன், புட்டாஸ் கொண்ட பழமையான தோற்றம் கொண்ட புடவைகளைதான் அதிகமாக நாடுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-11-300x225.jpg)
3. சினேகா :
டிரெடிஷ்னல் உடைகளில், இப்போதும் எப்போதும் சிநேகா தனித்துவம்தான். சிநேகாவின் மேக்கப், நகைத் தேர்வு, ஹேர் ஸ்டைல் என அத்தனையும் அழகு மிளிரும். தனக்கான ஆடையை அவரே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-5-300x202.jpg)
4. அதிதி பாலன்:
இவரை நேரகாணலுக்கு அழைக்காத மீடியாக்களே இல்லை எனலாம். அப்படி அவர் சென்ற எல்லா இடங்களுக்கும், காட்டன் புடவை, சில்க் புடவை என சிம்பிள் ஆகவே தன்னை வெளிப்படுத்துகிறார். அதிலும் சிங்கிள் ப்ளீட் கொண்டு நேர்த்தியாக அணிகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-6-300x200.jpg)
5. கிீர்த்தி சுரேஷ்:
ஹோம்லி லுக்கில் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகி. கீர்த்தி இதுவரை வந்த படங்களில், புடவை என்ட்ரி இல்லாத படங்களே இல்லை எனலாம். திரையில் மட்டுமில்லை. பட புரமோஷன், வீட்டு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என தன் நிஜ வாழ்கையிலும் கீர்த்தி புடவையைதான் அதிகமாக அணிகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-7-296x300.jpg)
6. சமந்தா :
நடிகை சமந்தாவை எடுத்துக் கொண்டால் ஆடை தேர்வில் அவரின் கவனம் மிக மிக சிறப்பாக இருக்கும். எந்த லுக்கிலும் அவர் கச்சிதமாக பொருந்தும். அவரின் புடவையைவிட அதற்கு அவர், தேர்வு செய்யும் ஹார்ஸ்டல் கல்லூரி பெண்களின் தி ஃபேவரெட். தெறியை மறக்க முடியுமா என்ன?
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-8-300x225.jpg)
இன்று புடவை பட்டிமன்றம் முடிந்து விட்டது. நாளை வேற ஒரு டாப்பிக் உடன் சந்திக்கலாம்.