குடும்பத்தை ஆலமரம் போல் கட்டி காக்கும் சினிமா பிரபலங்கள்! வித்யாசமான புகைப்பட தொகுப்பு

சொல்லபோனால் இவர்களை கண்டு கண் வைக்காதவர்களே இல்லை.

kollywood celebrities family photos

kollywood celebrities family photos : குடும்பம் இந்த அழகான வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்களின் குடும்பங்கள் உள்ளன. பாட்டன் வழி காலத்தில் இருந்து தங்களது குடும்பத்தை கூட்டுக் குடும்பமாக பிரபலங்கள் பலரும் கட்டி காத்து வருகின்றனர். சொல்லபோனால் இவர்களை கண்டு கண் வைக்காதவர்களே இல்லை. ஏதாவது விருது விழாவின் போதோ அல்லது படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் அனைவரும் கலந்துக் கொள்வார்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய குடும்பங்களை பற்றியது தான் இந்த அரிய புகைப்படத் தொகுப்பு.

1. சிவாஜி குடும்பம்:

நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பம் அன்று முதல் இன்று வரை மிகப்பெரிய கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பிரபு அவரது மனைவி , அவரது மகன் விக்ரம் பிரபு அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் சிவாஜி இல்லத்தில் தான் வசித்து வருகின்றனர்.  இவர்களின் குடும்பத்தின் மீது சினிமா துறையில் இருக்கும் எல்லாருக்கும் மிகப் பெரிய மதிப்பு உண்டு.

2. சிவக்குமார் குடும்பம்:

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவக்குமார் குடும்பம் பற்றி அறிமுகமே தேவையில்லை. சூர்யா தொடங்கி, கார்த்தி அவரின் தங்கை என அனைவரும் இப்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குடும்பம் எப்போதுமே எல்லாருக்குமே ஒரு முன்னோடி தான்.

3.விஜயகுமார் குடும்பம்:

மிகப்பெரிய குடும்பம். 5 பெண் பிள்ளைகள், 2 மனைவிகள் என விஜயகுமார் 3 தலைமுறைகள் பார்த்து விட்டார். இந்த குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரையொருவர் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதை பல கேமராக்கள் படபிடித்துள்ளனர்.

4. டி. ராஜேந்திரன் குடும்பம்

சிம்புக்கு மிகப் பெரிய பலமே அவரின் குடும்பம் தான். இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக சிம்புவை ஒருபோதும் டி.ஆர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை.

5. பாக்யராஜ் குடும்பம்

குடும்ப படங்கள் எடுப்பதில் மட்டுமில்லை குடும்பத்தை மிகச் சரியாக கட்டி காப்பதிலும் இயக்குனர் பாக்யராஜ் கைத்தேர்ந்தவர். மகன் சாந்தனுவின் காதல் கல்யாணம் வரை பாக்யராஜ் எடுத்த அனைத்து முடிவுகளும் அவரின் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துள்ளது.

6. சரத்குமார் குடும்பம்:

எத்தனையோ கேலி பேச்சுக்கள் இருந்தாலும் மிக அழகாக  தனது குடும்பத்தை நேசித்து அதை அருமையாக வழிநடத்தி வருகிறார் சரத்குமார். 3 பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாகவும், தனது ஆசை மகனுக்கு ஹீரோவாகவும், தனது மனைவி ராதிகாவுக்கு தூணாகவும் இருந்து குடும்பத்தை கட்டி காக்கிறார்  சரத்குமார்.

7. எடிட்டர் மோகன் குடும்பம்

சினிமாவில் நீண்ட காலமாக இருக்கும் பலருக்கும் இந்த குடும்பம் அதிகம் பரீட்சையம். தனது இரண்டு மகன்களையும் மிகச் சிறப்பாக வளர்த்து சிறந்த தந்தை என்று பெயர் பெற்று இருக்கிறார் எடிட்டர் மோகன்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kollywood celebrities family photos tamil cinema celebrities family images

Next Story
உடல் எடையை குறைக்க உதவும் டீடாக்ஸ் பானங்கள்!weight loss drinks
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com