kollywood news today : பள்ளி பருவம் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த வாழ்வில் யாரை வேண்டுமானாலும் அழைத்து கேளுங்கள் நீங்கள் எந்த பருவத்தை ரொம்ப மிஸ் செய்றீங்க. மீண்டும் ஏந்த லைஃப் கிடைச்சா நல்லா இருக்கும்னு சொல்லுங்க? என கேட்டால் உடனே வரும் பதில் இது தான் ஸ்கூல் டேஸ்.
எத்தனையோ நினைவுகளை நமக்கு விட்டு சென்றுள்ளது பள்ளிக்காலம். தமிழ் சினிமாவிலும் பள்ளி பருவத்தை மையப்படுத்தி வராதே கதைகளே இல்லை. ஹீரோ அல்லது ஹீரோயின்கள் இருவரும் சந்திக்கும் இடம் பள்ளியாக இருக்கும். அல்லது ஹீரோயின் ஸ்கூல் படிக்கும் போதே ஹீரோக்கு அவர் மீது காதல் வரும் என ஏகப்பட்ட பாணியில் பல பள்ளி கதைகளை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் இன்று ஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய முன்னணி ஹீரோயின்களின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். இதில் ரசிகர்களின் ஆல் டம் ஃபேவரெட் யார் என்று நீங்களே கண்டுப்பிடிங்கள்.
த்ரிஷா:
அபியும் நானும் த்ரிஷா சைக்கிளில் செல்லும் அழகு இருக்கே. அதிலும் ஊட்டி கான்வெர்ண்டில் அவர் படிப்பதால் அதற்கேற்ப அவர் ஹார்ஸ்டைல், யூனிஃபார்ம் இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-1-1024x576.jpg)
சமந்தா
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உண்மையான ஸ்கூல் பொண்ணு மாரி நம்ம சம்மு அவ்வளவு அழகாக இருப்பார். யோசித்து அவர் பேசுவதும் இன்னும் க்யூட்டாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-682x1024.jpg)
கெளரி கிஷண்:
கடந்தாண்டு வெளியான 96 திரைப்படம் மூலம் அறிமுகமாக கெளரி கிஷன் ஒரே படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அரசு பள்ளி மாணவியாக அவர் வந்த அனைத்து காட்சிகளும் சூப்பர் டூப்பர் லைக்ஸ் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-2-1024x602.jpg)
மியா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-1024x682.jpg)
அமர காவியம் படம் காதலர்களுக்கு எப்போதுமே நெருக்கமான ஒன்று. இதில் மியா வரும் பள்ளி காட்சிகள் அனைத்திலும் அவர் அழகாக இருப்பார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-1-1024x682.jpg)
மனிஷா யாதவ்:
இவர் அறிமுகமான முதல் படத்தில் ஸ்கூல் கேர்ள் ரோல் தான். குறையே சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பிலும் அழகிலும் ஜொலித்து இருப்பார்.
ஓவியா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-3.jpg)
களவாணி ஓவியா சொல்லவே வேண்டாம் அவ்வளவு அழகு. கிராமத்து ஸ்கூல் பெண்ணாக இவரை படம் முழுக்க ரசிக்கலாம்.
ஸ்ரீதிவ்யா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-4.jpg)
இவர் நடித்த 3 படங்களிலும் ஸ்கூல் கேர்ள் தான். ஜீவா படத்தில் தான் ஸ்ரீதிவ்யா க்கு ஃபேன்ஸ் ஃபாலோஸ் அதிகமானது.