ஓட்டை வீடு முழுக்க புத்தகம், ஒரு மதிப்பெண்ணில் கலைந்த போலீஸ் கனவு: கூமாப்பட்டி தங்கபாண்டி வைரல் ஹோம் டூர் வீடியோ
ஏங்க கூமாபட்டி நாங்கதான்! வேற யாருமே கிடையாது! ஒரு தனி ஐலாண்டுங்க! என்று சொல்லும் தங்கபாண்டி, தன் கிராமத்தின் மீதான அளவற்ற அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.
ஏங்க கூமாபட்டி நாங்கதான்! வேற யாருமே கிடையாது! ஒரு தனி ஐலாண்டுங்க! என்று சொல்லும் தங்கபாண்டி, தன் கிராமத்தின் மீதான அளவற்ற அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.
சோஷியல் மீடியாவில் ஒரே ஒரு வார்த்தையில் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களை வென்றவர். 'ஏங்க' என்ற ஒற்றை சொல்லில் கூமாபட்டியை உலகறியச் செய்த அந்த ஹீரோ, தங்கபாண்டி! விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமத்தின் பெருமைமிகு மகனான தங்கபாண்டியின் எளிமையான வாழ்வியலை சினிஉலகம் யூடியூப் சேனல் படம்பிடித்துள்ளது.
Advertisment
எங்க ஊர பாருங்க... எங்க தமிழ்நாட்டுல இந்த மாதிரி ஊர் இருக்காங்க! ஏங்க கூமாபட்டி நாங்கதான்! வேற யாருமே கிடையாது! ஒரு தனி ஐலாண்டுங்க! என்று சொல்லும் தங்கபாண்டி, தன் கிராமத்தின் மீதான அளவற்ற அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.
தங்கபாண்டியின் வீடு, ஓட்டு வீடாக இருந்தாலும், அங்கு எல்லா இடங்களிலும் புத்தகங்கள் நிறைந்திருந்தன. சமையலறையில் கூட….
Advertisment
Advertisements
" ஏங்க, எப்பவுமே புக்குதாங்க. எந்த நேரம் புக்க எடுத்து வாசிச்சுகிட்டே இருப்பேன். மத்த நேரம் இயற்கை காட்சிகளை ரசிக்குறது, சந்தோஷமா இருக்கிறது, அதான் என் வேலை, அரசியல் ரொம்ப பிடிக்கும் எனக்கு... இந்த அரசியல் ரீதியான கோட்பாடு, ஆளுமைப் பண்பு, தனி மனித ஆளுமைப் பண்பு ரொம்ப பிடிக்கும். நம்ம எளிமையாதானே வாழுவோம், எளிமையா இருப்போம். ரொம்ப ஆடம்பரம் வாழ அவசியம் இல்ல. வாழ்றதுக்கு தேவையான வசதி இருந்தா போதும்" என்று கூறும் தங்கப்பாண்டி, தனது ஆட்டுப் பட்டியில், ஆடுகளுக்குக் காவல் காக்கிறார். இரவில் அங்கேயே மகிழ்ச்சியாகத் தூங்குவதாகக் கூறுகிறார்.
காவல்துறை தேர்வில் ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்த தங்கபாண்டி, தற்போது தனது சொந்தத் தொழிலான ஆடு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கூமாப்பட்டியை உலகறியச் செய்தது போல, தனது குடும்பத்திற்கும் ஒரு பெரிய வீட்டை கட்டித் தர வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
"சின்ன வயசுல இருந்து ரொம்ப ஆசை இருக்குங்க எனக்கு. குடி இருக்க வீடு இல்லாம.. கூமாப்படியில வெள்ளம் வந்துச்சு. வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு, நாங்களா வேலை செஞ்சு இந்த ஓட்டு வீட்டைக் கட்டுனோம். இதுல இந்த நாலு பேர் படுக்க முடியாது, படுக்க இடம் கிடையாது. ரொம்ப கஷ்டமா இருக்கு. இதனாலதான் நான் எப்படியாவது இந்த எருமை மாடு, ஆட்டு நல்லா வளர்த்து பெரிய வீடா கட்டணும், அம்மா அப்பா நல்லா வச்சுக்கறணும் அப்படின்றதுக்காகவே பெரிய வீடு கட்டணும்னு எண்ணத்தில இருக்கேன். நல்ல வீடா கட்டி வாழணும்னே" என்று தன் கனவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தங்கப்பாண்டியின் இந்த தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவரை விரைவில் அவரது இலக்கை அடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை!