scorecardresearch

வறண்ட, காம்பினேஷன் சருமத்துக்கு ஏற்ற சிம்பிள் கொரியன் பியூட்டி டிரெண்ட்!

ஸ்லக்கிங் – புதிய கொரியன் பியூட்டி டிரெண்ட்- ஆனால் இதை நீங்கள் முயற்சிப்பதற்கு முன், அது எதைப் பற்றியது என்பதைக் கண்டறியவும்.

Beauty Tips
Korean beauty trend Slugging for dry and combination skin types

கடந்த சில ஆண்டுகளில், கொரியன் பியூட்டி டிரெண்டுகளால் நாம் நிரம்பி வழிகிறோம்- அப்படி புதிய பியூட்டி’ டிரெண்ட் ஆகும்போது, அதை முயற்சிக்க நாம் விரும்புகிறோம், இல்லையா? இன்று உங்களுக்காக மற்றொரு டிரெண்ட் இருப்பதால் உடனே தயாராகுங்கள்; குறிப்பாக உங்களுக்கு உலர்ந்த அல்லது கலவையான சருமம் இருந்தால், இது உங்களுக்கானது!

ஸ்லக்கிங் (Slugging) – புதிய கொரியன் பியூட்டி டிரெண்ட்- ஆனால் இதை நீங்கள் முயற்சிப்பதற்கு முன், அது எதைப் பற்றியது என்பதைக் கண்டறியவும்.

ஸ்லக்கிங் என்றால் என்ன?

மற்ற அழகு பராமரிப்புகளை போலல்லாமல், ஸ்லக்கிங்கிற்கு’ ஒரே ஒரு ஸ்டெப் மட்டுமே தேவைப்படுகிறது, இது ‘பளபள’ தோற்றத்தை விரும்புவோருக்கு ஏற்றது.

இந்த டிரெண்டின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கொள்கை, உங்கள் சருமத்தின் தடையைப் பாதுகாப்பதும், அது நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். இது சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

இந்த டிரெண்டை தோல் பராமரிப்பு வழக்கத்தில் எப்படி இணைப்பது?

நீங்கள் இரவில் தூங்கும் முன் பெட்ரோலியம் ஜெல்லியின் அடர்த்தியான லேயரை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். ஜெல்லியின் தடிமனான லேயருடன் தூங்குவதற்குப் பின்னால் உள்ள யோசனை என்னவென்றால், ஜெல்லியின் தடை செய்கிற தன்மை, சருமத் துவாரங்களை அடைத்து, சரும பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக, வறண்ட சருமம் அல்லது கலவையான சருமத்திற்கு (combination skin) இந்த குறிப்பு சிறப்பாகச் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இருமுறை சுத்தம் செய்வதன் மூலம் வழகத்தை தொடங்குங்கள் – இது கொரிய அழகின் முக்கிய அம்சம். முடிந்ததும், உங்கள் வழக்கமான தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றவும். டோனிங், மாய்ஸ்சரைசர், சீரம் மற்றும் இறுதியாக பெட்ரோலியம் ஜெல்லியை தடவி தூங்குங்கள்! நீங்கள் எழுந்ததும், பெட்ரோலியம் ஜெல்லியின் எச்சங்களை ஒரு மென்மையான துணியால் அகற்றவும், இப்படி செய்தால், நீங்கள் ஒளிரும் மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுவீர்கள்.

என்ன நன்மைகள்?

சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் மாற்ற வேண்டியதில்லை, ஏனெனில் ஸ்லக்கிங்’ எப்போதும் உங்கள் பராமரிப்பு வழகத்தின் கடைசி படியாக இருக்கும். இதை சரியாகச் செய்யும்போது, மற்ற தயாரிப்புகளும் சிறப்பாகச் செயல்பட உதவும். இந்த எளிய படி உங்கள் சருமத்தின் தடையையும் குணப்படுத்துகிறது.

இருப்பினும், நீங்கள் முகப்பரு அல்லது எண்ணெய் பசை மற்றும் சென்சிட்டிவான சருமம் கொண்டவராக இருந்தால், பெட்ரோலியம் ஜெல்லியில் இருந்து மட்டுமின்றி மற்ற வகையான அழகுப் பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Korean beauty trend slugging for dry and combination skin types