முதுகுவலி, மூட்டுவலி போன்ற உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் பலரும் சமீபகாலமாக நாடிச்செல்லும் ஒரு தீர்வு, கொரியன் மேட். நிறைய நேச்சுரோபதி சிகிச்சை மையங்கள் மற்றும் ஸ்பாக்களில் கொரியன் மேட் பிரபலமாகி வருகிறது. ஆன்லைனிலும் இதன் விலை ₹15,000 முதல் ₹20,000 வரை விற்கப்படுகிறது. கொரியன் மேட் என்பது, பார்ப்பதற்கு ஒரு சாதாரண ரப்பர் மேட் போல இருக்கும். ஆனால் அதன் உட்புறத்தில், ஜேட், அமிதிஸ்ட், டூர்மாலின் போன்ற சில கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதோடு, ஒரு வெப்பமூட்டும் கருவியும் (heating element) இணைக்கப்பட்டிருக்கும்.
Advertisment
இதை மின்சாரத்தில் இணைத்து ஆன் செய்தால், கற்கள் சூடாகி ஒரு குறிப்பிட்ட வெப்பத்தை உருவாக்கும். அந்த மேட்டில் சிறிது நேரம் படுப்பதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகள் குணமாகும் என்று கூறுகிறார்கள்.
கொரியன் மேட் பற்றி சொல்லப்படும் அத்தனை விஷயங்களும் உண்மையா என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக கூறுகிறார் டாக்டர் அருண்குமார்.
Advertisment
Advertisements
வெப்ப சிகிச்சை (Heat Therapy), இதுதான் கோரியன் மேட்டின் ஒரே உண்மையான நன்மை. நமக்கு எங்கேனும் வலி ஏற்பட்டால், சூடான ஒத்தடம் கொடுப்பது வழக்கம். பிசியோதெரபிக்குச் செல்லும் போது கூட, இது போன்ற வெப்ப சிகிச்சைகள் அளிக்கப்படும். முதுகுவலி, தசைவலி போன்ற பிரச்சனைகளுக்கு அதில் இருந்து வரும் வெப்பம் ஓரளவு நிவாரணம் தரும். அவ்வளவுதான். அதை ஒரு சாதாரண ஹீட்டிங் பேடில் இருந்தோ, அல்லது வெந்நீர் ஒத்தடம் மூலமாகவோ கூட நாம் பெற முடியும். ஆனால், அவர்கள் கூறுவது போல, உடல் எடை குறைப்பு, தைராய்டு சிகிச்சை, நச்சு நீக்கம் போன்ற பெரிய நன்மைகள் எதுவும் இதனால் கிடைக்காது.
கொரியன் மேட் மூலம் கூறப்படும் மற்ற அத்தனை பெரிய மருத்துவப் பயன்களும் வெறும் விளம்பரங்கள் மட்டுமே. எனவே, இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், என்கிறார் டாக்டர் அருண்குமார்.