90-ஸ் கிட்ஸ் தொடங்கி 2கே கிட்ஸ் வரை அனைவரும் நிச்சயமாக கொரியன் ஸ்கேன் கேர் டிப்ஸ் குறித்து அறிந்திருப்பார்கள். ஏனெனில், BTS, கொரியன் வெப் சிரீஸ் என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நம் ஊரில் இருக்கிறார்கள். இதன் வாயிலாக கொரியன் சரும பராமரிப்பு முறையை இன்றைய இளைஞர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
Advertisment
ஆனால், இது போன்ற கொரியன் ஸ்கின் கேர் பொருட்களை கடைகளில் இருந்து வாங்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய பணம் செலவாகும். மேலும், நாம் வாங்கும் பொருட்கள் தரமானது தானா என்கிற சந்தேகமும் சிலருக்கு இருக்கும். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கொரியன் ஃபேஸ்பேக்கை நம்மால் உருவாக்க முடியும்.
ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு முறை கழுவிவிட்டு, சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன், பின்னர் இதே அரிசியை அடுப்பில் வைத்து குழைவாக வடிக்க வேண்டும்.
இதையடுத்து, குழைவாக வடித்த சாதத்தை மிக்ஸியில் போட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்தால் கொரியன் ஸ்பெஷல் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை நம் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதை போன்று தேய்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடலாம். இந்த ஃபேஸ்பேக்கில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமையை ஏற்படுத்தாது. அதனால் தினமும் கூட இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ்பேக் மூலம் நம் முகம் பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்கும்.
நன்றி - Eyekiller Tamil Beauty Tips Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.