milagai chutney recipe milagai chutney recipe in tamil
Kothamali chutney, kothamali chutney recipe : கொத்தமல்லியின் வேர், தண்டு, இலை, விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. கொத்தமல்லியின் விதைகளை தனியா என்று அழைப்பர். இரவு படுக்கும்முன் தனியாவை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியினை தொடர்ந்து சாப்பிட்டு வர கருவில் இருக்கும் குழந்தையின் எலும்புகள் வலுப்படும்.
Advertisment
சரும பளபளப்பிற்கு கொத்தமல்லியினை மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம். கொத்தமல்லியை சாறெடுத்து தேன் கலந்து குடித்துவர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் இளைக்கும். இனி, கொத்தமல்லியில் சட்னி.
கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
Advertisment
Advertisements
தக்காளி - 1
வரமிளகாய் - 5
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொத்தமல்லியின் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும்.
பின் வரமிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் தக்காளியை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
சூடானது ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”