scorecardresearch

வீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்

Kothamalli Chutney Tamil கொத்தமல்லியை வைத்து ஆல் இன் ஆல் துவையல் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

வீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்
Kothamalli Chutney Malli thuvaiyal recipe Tamil

Kothamalli Chutney Recipe Tamil : திடீரென வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால், ‘என்ன சமைப்பது என்கிற’ குழப்பம்தான் முதலில் தோன்றும். அவற்றுக்கு விடைதான் ‘துவையல்’. பருப்பு, கொள்ளு, தேங்காய் என ஏராளமான துவையல் வகைகள் உண்டு. அதிலும், இட்லி, தோசை, சாதம், பிரெட் என அனைத்திற்கு பக்காவான சைடு டிஷ் எளிமையான துவையல் கொடுக்க முடியுமென்றால் நம்ப முடிகிறதா? கொத்தமல்லியை வைத்து அப்படிப்பட்ட ஆல் இன் ஆல் துவையல் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கொத்தமல்லி – 1 கப் (1 கட்டு)
பச்சை மிளகாய் – 6 (பெரியதாக இருந்தால் குறைவாகப் பயன்படுத்தவும்)
சிறிய வெங்காயம் – 20 (பெரிய வெங்காயம் -1 அல்லது 2)
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
புளி – மிகச் சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கிக்கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும், வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்க்கவும்.

ஒரு நிமிடம் கழித்து, அரைத்த தேங்காயைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

இறுதியாகக் கொத்தமல்லி சேர்த்து, இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி அதிகம் சமைக்கத் தேவையில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கலவை குளிர்ந்த பின், உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

சுவையான கொத்தமல்லி துவையல் தயார். தேவைப்பட்டால், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துத் துவையலோடு சேர்த்துக்கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kothamalli chutney malli thuvaiyal corainder chatni recipe tamil