சுவையான கொத்தவரங்காய் வற்றல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
கொத்தவரங்காய் – அரை கிலோ
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சற்று தடிமனான கொத்தவரங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அடி நுனி நீக்கிவிட்டு அலசிய பின் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொத்தவரங்காய் வெந்ததும் இறக்கி, நீரை வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும். அதாவது உடைக்கும் பதம் வரும் வரை காய வேண்டும். பிறகு அதை எடுத்தால் கொத்தவரங்காய் வற்றல் ரெடி. வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் சாதத்தோடு வைத்து சாப்பிட சுவை அள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“