கொத்தவரங்காய் வைத்து சுவையான கார குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10-12
கொத்தவரங்காய் – 15
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் –சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கொத்தவரங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு புளியை 1 கப் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும். புளி கரைசல் தயார் செய்யவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் கொத்தவரங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். இப்போது புளி கரைசல் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அவ்வளவு தான் ருசியான கொத்தவரங்காய் கார குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“