செம்ம சுவையான கோதுமை அடை மற்றும் தக்காளி- வெங்காய சட்னி இப்படி செய்யுங்க.
சட்னிக்கு தேவையான பொருட்கள்
தக்காளி 2
வெங்காயம் 2
7 வத்தல்
10 பல் பூண்டு
உப்பு
எண்ணெய்
கால் ஸ்பூன் கடுகு
1 கொத்து கருவேப்பிலை
2 வத்தல்
செய்முறை : தக்காளியை நன்றாக நறுக்க வேண்டும், வெங்காயாத்தை நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து தக்களி, வெங்காயம், வத்தல், பூண்டு சேர்த்து கிளர வேண்டும். நன்றாக வதங்கியதும் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த சட்னியில் எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
தேவையான பொருடக்ள்
1 கப் கோதுமை மாவு
2 ஸ்பூன் ரவை
2 ஸ்பூன் பச்சரிசி மாவு
முக்கால் டீஸ்பூன் உப்பு
பூண்டு 4
சின்ன துண்டு இஞ்சி
4 வத்தல்
அரை டீஸ்பூன் சீரகம்
எண்ணெய்
அரை ஸ்பூன் கடலை பருப்பு
அரை ஸ்பூன் கடுகு
1 வெங்காயம்
4 ஸ்பூன் துருவிய கேரட்
1 தக்களி
கொத்தமல்லி
செய்முறை : கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும், தொடர்ந்து ரவை, பச்சரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் வத்தல், இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை மாவில் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரல் எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம், கடலை பருப்பு, துருவிய கேரட், தக்காளி நறுக்கியது சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும். இதை மாவில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கோதுமை அடை சுட்டு எடுக்கவும்.