கோதுமை ரவையில் இப்படி கேசரி செய்வதால், இது மிகவும் ஆரொக்கியமானது. மேலும் இது அதிக சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
½ கப் கோதுமை ரவை
½ கப் வெல்லம்
முந்திரி 5
திராட்சை 6
3 ஸ்பூன் நெய்
ஏலக்காய் பொடி
செய்முறௌ : ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி திராட்சைகளை வதக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். மீண்டும் நெய் சேர்த்து கோதுமை ரவையை நன்றாக வதக்கவும். நன்றாக வாசனை வரும் வரை வறுத்த பிறகு அதில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். இனியொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்து கொள்ளவும். தொடர்ந்து இந்த பாகை கோதுமை ரவையில் சேர்த்து கிளரவும். கூடுவே நெய் சேர்த்து கிளரவும். கடைசியாக முந்திரி, திராட்சையை சேர்க்கவும். ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“