Advertisment

கடினமான ஆங்கில சொற்களை பேசி உலக சாதனை படைத்த கோவை சிறுவன்

சிரமமான மேற்கத்திய ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்களோடு உச்சரித்து அசத்தும் கோவை சிறுவன்.

author-image
WebDesk
New Update
saasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிரமமான மேற்கத்திய  ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்களோடு உச்சரித்து அசத்தும் கோவை சிறுவன்.

Advertisment

 அறிவியல்,தொல்லியல்,மருத்துவம் தொடர்பான 50 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் அடங்கிய  ஆங்கில சொற்களை எளிதாக கூறி கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்,ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன்.ஆறு வயதான சிறுவன் லோகித்  இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ் சர்வதேச  அகாடமியில் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கூடுதலாக பயின்று  வருகிறார்.இந்நிலையில் லோகித்தின் நினைவாற்றல்  திறமையை கண்ட பயிற்சியாளர் தர்ம தேவ் சிறுவனுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளார்.

 

இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல்,மருத்துவம்,தொல்லியல்,ஆங்கில சொற்றொடர்  உள்ளிட்ட துறை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட  ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக கூறியும்,அதே நேரத்தில் முழுமையான சொல்லாகவும்,அதன் ஆங்கில பொருளையும் ஐந்து நிமிடம் பதினேழு விநாடிகளில்  கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.சிறுவன் லோகித்தின்  இந்த அரிய சாதனை ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..சிறுவன் லோகித் இதே போல 200 நாடுகளின் பெயர்களை கூறி ஏற்கனவே ஒரு  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில் தற்போது ஆறே மாதத்தில் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடதக்கது.

 செய்தி: பி.ரஹ்மான்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment