கோவையில் ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 28 நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நடன வடிவில் கர்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை நடித்து காண்பித்து காண்போரை பிரமிக்க வைத்தனர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f4b59075-e07.jpg)
ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f646f337-c8f.jpg)
தொடர்ந்து ஶ்ரீ நாட்டிய நிகேதன் குழுவினரின் கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 28 நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நடன வடிவில் கர்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை நடித்து காண்பித்து காண்போரை பிரமிக்க வைத்தனர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/99d81241-0fa.jpg)
இதுகுறித்து ஶ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளியின் நிறுவனர் மிருதுளா ராய் கூறியதாவது; இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களை ஶ்ரீ நாட்டிய நிகேதின் உருவாக்கியுள்ளது. இந்த நடன பள்ளியின் மூலம் நடனக் கலைஞர்களுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்று நமது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f2265a21-5cd.jpg)
எங்கள் பள்ளி சார்பில் ஆண்டுதோறும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு எங்கள் பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடை வள்ளல் கர்ணனின் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்தியுள்ளோம். 28 பேர் இணைந்து இதனை அரங்கேற்றியுள்ளோம். கடந்த 1 மாதத்திற்கு மேலாக இதற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
மேலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் இதில் இடம் பெற்றது. கலாச்சாரத்தையும் கலையையும் பிரதிபலிக்கும் விதமாக நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக மக்களின் பாராட்டுக்களை பார்க்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“