கோவையில் நடைபெற்ற திருமண ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் மண கோலத்தில் மேடையை அலங்கரித்து இளம் பெண்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். இளம் தலைமுறையினரை கவரும் வகையிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன.
துவக்கத்தில் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வரும் மாடல்கள் ஃபேசன் ஷோவில் அணி வகுத்து நடந்து பார்வையாளர்களை வசப்படுத்திய நிலையில் சமீப காலமாக ஆடை அணிவகுப்பு குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிகள் என பல தரப்பினருக்கும் நடக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் திருமண ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த பிரைடல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் 50"க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பங்கேற்று மணப்பெண் அலங்காரத்தில் வண்ண வண்ண பட்டாடையுடன் மேடையில் தோன்றி பூனை நடை நடந்து பார்வையாளர்களை தன்வசப்படுத்தினர்.
வழக்கமாக நவீன ஆடைகளுடன் இளம்பெண்களை ஃபேசன் ஷோவில் பார்த்து பழகியவர்கள், பட்டு புடவை, அணிகலன்களுடன் தலையில் பூச்சூடிய பெண்கள் மணக்கோலத்தில் ஃபேஷன் ஷொவில் ஒய்யார நடை போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
செய்தி: பி.ரஹ்மான்,கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“