தெருவில் சுற்றித் திரிந்த மாடுகள் சண்டையிட்டு முட்டி தள்ளியதில் 5 மாத குழந்தையுடன் தாய் உள்பட கோவையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பராமரிக்காத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவரது மனைவி ஜீனத் நிஷா. இவர்களது 5 மாத குழந்தை உள்ளது. நேற்றிரவு ஜீனத் நிஷா, தனது 5 மாத குழந்தையுடன் தொழுகைக்கு சென்று விட்டு, மாமா சாஹிப்-வுடன் உக்கடம் புல்லுக்காடு வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அப்பகுதியில் இரண்டு மாடுகள் சண்டையிட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த மாடு வேகமாக ஓடி வந்து ஜீனத் நிஷாவை முட்டி தள்ளியது. இதில், ஜீனத் மற்றும் அவரது 5 மாத குழந்தை படுகாயம் அடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/Fe9kTzeK6lTwTN5Qo90I.jpg)
மேலும் அதனை தடுக்கச் சென்ற மாடு சாஹிப்-யையும் முட்டி தள்ளியது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் உக்கடம் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.