நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நந்தினி - மணிகண்டன் தம்பதியினருக்கு பிறந்த 1.5 வயது குழந்தை கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் "பிலியரி அட்ரோசியா" எனப்படும் பிறவி நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் பாதிப்பால் அவதியடைந்துள்ளது.
மேலும் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் பரிசோதனை செய்த போது குழந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.
முன்னதாக குழந்தையின் பெற்றோர்களே கல்லீரலை கொடுக்க முன்வந்த போது அவர்களை பரிசோதனை செய்ய போது பெற்றோர்களின் கல்லீரல் பொருத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து 11 மாதங்கள் போராட்டத்துடன் காத்திருந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த பெரியவரிடமிருந்து முழுக் கல்லீரலை பெற்று இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியை 1.5 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் குழந்தைக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது.
இந்த சிகிச்சையானது சுமார் 11 மணி நேரமாக நடைபெற்றது. இந்த சிகிச்சையின் போது பல்வேறு சிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு அறுவை கிசிச்சை செய்யபப்ட்டது.
இந்த அறுவை சிகிச்சை மொத்தம் 15 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் மூலம் 9 லட்ச ரூபாயும், மணிகண்டன் நண்பர்கள் இரண்டு லட்ச ரூபாயும், மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் மருத்துவமனை சார்பாகவும் கொடுக்கபட்டது.
மணிகண்டன் அரசாங்கத்தில் போலீசாக பணியாற்றி வருவதால் அவருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கீழ் சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. தற்போது இந்த குழந்தை குணமடைந்து திருச்செங்கோடு அருகே கிராமத்தில் இயல்பாக இருக்கிறது.
மேலும் இந்த சிகிச்சைக்காக 12 முதல் 15 லட்சம் வரை செலவாகும் எனவும் மருத்துக் காப்பீட்டு திட்டம் கீழ் இந்த சிகிச்சைக்கு பலன் அடையலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“