Advertisment

8 மணி நேர உழைப்பு: முத்தங்களால் கமல் உருவத்தை வரைந்து அசத்திய ரசிகர்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர் நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசளிக்கும் வகையில் முத்தங்களால் அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
apuram

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர் நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசளிக்கும் வகையில் முத்தங்களால் அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.

Advertisment

 உதட்டு சாயத்தை பூசி முத்தமிட்டே நடிகர் கமலஹாசனின் முகத்தை உருவாக்கி உள்ளார். இது குறித்து UMT ராஜா கூறுகையில், சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் அவரது பெயருக்கு முன் உள்ள UMT என்பதையே கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தை பார்த்து தான் வைத்துள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு முன்பே இவர் நீரில் உருவாகும் பாசியில் கமலஹாசனின் உருவத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment