ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள்,மாணவிகள்மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.கல்லூரி மாணவிகள் நடத்திய இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“