கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் மற்றும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாகவும் இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என மூன்று பிரிவுகளாக பெண்கள் ஓடினர்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான் பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளனர். இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய் முழுமையாக புற்று நோய்க்காக செலவு செய்யப்படும். கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் பிரவீன்ராஜ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“