இந்தியாவில் முதன்முறையாக ஜப்பான், கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.
பார்கின்சன் நோய் எனப்படும் நரம்பியல் சார்ந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் மாதேஸ்வரன் கோவையில் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/a9d3b6f3-d1c.jpg)
பார்க்கின்சன் எனும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சையில் அதி நவீன தொழில்நுட்பமான ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு முறையில், கத்தியின்றி தலையில் எந்த விதமான துளைகள், கீறல்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் முதல் மருத்துவமனையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் கோவை ராயல் கேர் மருத்துவமனை இது தொடர்பான மருத்துவ கருத்தரங்கை கோவையில் நடத்தியது.
ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சிகிச்சை தொடர்பாக இந்திய அளவில் முதல் முறையாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொரியா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/d0cee4ff-644.jpg)
இது குறித்து நரம்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாதேஸ்வரன் கூறியதாவது; கத்தியின்றி இரத்தம் வராமல் அறுவை சிகிச்சை செய்யும் உலகின் அதிநவீன சிகிச்சையாக இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. மேலும் இதில் கலந்து கொள்ளும் மருத்துவர்களுக்கு இந்த சிகிச்சை குறித்து நேரடி பயிற்சி வழங்கும் விதமாக நோய் பாதித்த இரண்டு பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதை காணொலி காட்சி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பி.ரஹ்மான், கோவை