சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று ஓடினர்.
மரபியல் மற்றும் சில வைரஸ்கள் போன்ற பல்வேறு காரணிகளால் "டைப் ஒன்" சர்க்கரை நோய் சிறு சிறுவயதிலேயே ஏற்படுகிறது. இத்தகைய சர்க்கரை நோயை குழந்தைப் பருவத்திலோ கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி தனியார் அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/2d75360f-6c2.jpg)
’கிட் ஏ தான்’ (kid a Thon) எனும் தலைப்பில் சிறு வயதிலேயே வரும் டைப் 1 சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று ஓடினர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“