செல்போன் மூலமாக ’க்யூ.ஆர்’ குறியீடுகளை உள்ளடக்கி இணையதளம் மூலமாக 5 நிமிடங்களில் உடல் உறுப்பு தான விண்ணப்பங்களை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முறையை கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தனது செல்போன் மூலம் பதிவு செய்து துவக்கி வைத்தார்.
உடல் உறுப்பு தானத்தில் கோவை மாநகரை நாட்டின் முன் மாதிரியாக மாற்றும் வகையி்ல் புதிய முயற்சியாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தில் 300க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் (தனியார்) ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை இன்று நடத்தியது.
இம்மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, ஆகியவையுடன் இணைந்து ஒரு லட்சம், உடல் உறுப்புகளை பொதுமக்கள் தானமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை முன் வைத்து ஆன்லைன் உறுப்பு தான டிரைவ் ஒன்றை தொடங்கியுள்ளது.
நமது செல்போன் மூலமாக இதன் க்யூ.ஆர் குறியீடுகளை உள்ளடக்கி இணையதளம் மூலமாக 5 நிமிடங்களில் உடல் உறுப்பு தான விண்ணப்பங்களை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகர ஆணையர் சரவண சுந்தர் தனது செல்போன் மூலம் பதிவு செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புண்வு நடைபயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
உறுப்பு தானம் செய்யும் எண்ணத்தை அதிகரிக்கவும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், மனித உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில், இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சார்ந்த 300க்கும் அதிகமான என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/3a920804-7dd.jpg)
முன்னதாக உடல் உறுப்புகள் தானம் குறித்த கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இந்த பயணத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும், பாரம்பரிய கலாச்சார உடையில் பங்கேற்று, நடந்து சென்று உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் எடுத்துரைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை வழி நடத்தினார்.
பி.ரஹ்மான், கோவை