scorecardresearch

கோவையில் 25 தனியார் ஆட்டோக்களில் நூலக திட்டம் – தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்

கோவையில் காவல்துறையின் சார்பில் நூலகம் அமைக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாநகர காவல் துறையின் அறிவுறுத்தலில் தனியார் ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

coimbatore, kovai police commissioner Balakrishnan, auto library plan launched, Tamilnadu, coimbatore news

கோவையில் காவல்துறையின் சார்பில் நூலகம் அமைக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாநகர காவல் துறையின் அறிவுறுத்தலில் தனியார் ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆட்டோக்களில் நூலகத் திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார்.

நூலகங்களை அதிகரிப்பதன் மூலம் குற்றங்களை குறைக்கலாம் என்ற அடிப்படையில் வாசிப்புத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய புதிய நூலக திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையாளரின் ஆலோசனையின் பேரில் கோவையில் உள்ள 155 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக 25 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் அமைக்கும் பணியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ராமநாதபுரம் பகுதியில் துவங்கி வைத்தார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kovai police commissoner launched 25 private auto rickshaws library plan in coimbatore

Best of Express