கோவையில் தனியார் பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம்... சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற அறிவிப்பை மறந்து ஆபத்தான முறையில் கோவையில் இளைஞர்கள் படிக்கட்டுக்குளில் பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற அறிவிப்பை மறந்து ஆபத்தான முறையில் கோவையில் இளைஞர்கள் படிக்கட்டுக்குளில் பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
bus video viral

கோவையில் இளைஞர்கள் படிக்கட்டுகளில் பயணம்

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற அறிவிப்பை மறந்து ஆபத்தான பயணத்தில் கோவையில் இளைஞர்கள் பயணம் செய்து வருகின்றனர். 

Advertisment

கோவையில் தனியார் பேருந்து படிக்கட்டில் பயணிகள் தொங்கி செல்லும் வீடியோ சமூக வளையதளங்களில் பரவி வருகிறது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினசரி 50 - க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் காலை நேரத்தில் அதிக அதிகளவில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வர்கள் அதிக அளவில் கோவை மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கோவை வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும்  பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து படிக்கட்டில் ஆண்கள், பெண்கள் என ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisment
Advertisements

டிக்கெட்டுக்காக அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்லும் உரிமையாளர், ஓட்டுனர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இதற்கு உரிய எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனங்கள் இயக்குவதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

covai Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: