/tamil-ie/media/media_files/uploads/2023/06/Kovai-techie.jpeg)
புதிய செயலியை உருவாக்கிய கோவை இளைஞர் உதய் பிரகாஷ்
சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக உலகிலேயே முதல் செயலியாக ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலியை கோவையை சேர்ந்த இளைஞர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கோவையை சேர்ந்த இளைஞர் உதய் பிரகாஷ். கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் தொடர்பான செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் (Zynoplix) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை உருவாக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வு: நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த மணி நேரத்தில் கடந்த கோவை இளைஞர்
கடந்த ஒரு வருடமாக புதிய செயலியின் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்ட உதய்பிரகாஷ், தற்போது செயலியின் இறுதி வடிவத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். உலகின் முதல் செயலியாக தங்களுக்கு பிடித்த வீடியோக்களை யார் வேண்டுமானலும், விற்கவும் வாங்கவும் வசதியாக உருவாக்கி உள்ள இதில் கணிசமான வருமானத்தை தினமும் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதய் பிரகாஷ் கூறியதாவது, இரண்டு பேர் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளோம். நமது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்வுகளை சாதாரண செல்போன்களில் படம் பிடித்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்வதால் உலகின் எந்த பகுதியில் இருப்பவர்களும் இந்த வீடியோவை வாங்க முன்வருவதால் கணிசமான வருமானமும் இதில் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய மற்ற சமூக வலகதளங்களை போல அல்லாமல், இந்த ஜைனோ பிளிக்ஸ் செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை விகிதத்தில் பணம் கிடைப்பது போல வீடியோக்களை விற்பனை செய்தும் இதில் வருமானம் பெற முடியும். தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் இந்த செயலியின் வாயிலாக வேலைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களும் இந்த செயலியின் வாயிலாக எளிதாக பணம் சம்பாதிக்க இயலும், என்று கூறினார்.
யூடியூப், பேஸ்ஃபுக், வாட்ஸ் அப் என உலகின் முன்னனி செயலிகளின் இடையே தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.