கோவை அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலை ஏற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பூண்டி, செம்மேடு பகுதியில் அமைந்து உள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் மலை ஏறுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/4c0c1d04-6bd.jpg)
அதில் 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே கிரிமலை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/35146803-dfb.jpg)
உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, மூச்சு திணறல் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவரவர் உடல் நலனில் அக்கறை கொண்டு, பாதுகாப்பு கவனத்தில் கொண்டு கிரிமலை செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். மலை ஏறுவதற்கு கட்டணம் இல்லை. இந்த கட்டுப்பாடுகள் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கோவை நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/503f7d7d-8e0.jpg)
இந்நிலையில் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் சன்னிதியில் மலை ஏற்றத்திற்கான மலை பாதையை வனத்துறை வனப்பராக சுசீந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் கிரி மலை பயணத்திற்கு படி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பி மலைக்குச் சென்றனர்.
பி.ரஹ்மான், கோவை