இப்படித்தான் மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தில் கோவைக்காய் சட்னி செய்யப்படுகிறது. நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் எண்ணெய்
2 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் கொத்தமல்லி விதை
4 வத்தல்
150 கிராம் கோவைக்காய் நறுக்கியது
4 பூண்டு
கொஞ்சம் புளி
தண்ணீர்
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு கொத்தமல்லி விதை, வத்தல் சேர்த்து கிளரவும். நன்றாக பொறிந்ததும், அதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கோவைக்காய்யை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் அனைத்தையும் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்து இதில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து கொட்டவும்.