கோவைக்காய் வைத்து இப்படி ஒரு கும்பானு ஷாக் ஆயிடுவீங்க. செம்ம ருசியா ஒருக்கும்.
தேவையான பொருட்கள்
10 சின்ன வெங்காயம்
6 பல் பூண்டு
கருவேப்பிலை ஒரு கொத்து
கால் மூடி தேங்காய் துருவல்
1 ½ ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
கால் கிலோ கோவைக்காய்
தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் 4
சின்ன வெங்காயம் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
உப்பு
புளி தண்ணீர்
செய்முறை: முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து, இத்துடன் மல்லித்தூள், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை சேர்த்து, நறுக்கிய கோவைக்காய், இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்க வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து கிளர வேண்டும். 6 நிமிடங்கள் கழித்து புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து உப்பு வேண்டும் என்றால் சேர்க்கவும். 13 நிமிடங்கள் குழம்பு கொதிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“