சுவையான கொய்யா சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
கொய்யா பொடியாக நறுக்கியது – 250 கிராம்
இஞ்சி நறுக்கியது – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி இலைகள் நறுக்கியது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நறுக்கிய கொய்யா, மல்லி இலைகள் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க. இந்த சட்னி கொய்யாவின் இயற்கையான துவர்ப்பு சுவையுடன், உவர்ப்பு, காரத்துடன் கலந்து சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“