ஒரு முறை இப்படி இட்லி மாவில், கொழுகட்டை செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையா பொருட்கள்
1 கப் தோசை மாவு
அரை கப் ரவை
கால் டீஸ்பூன் சோடா உப்பு
அரை கப் தண்ணீர்
உப்பு
2 ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடலை பருப்பு
கால் ஸ்பூன் சீரகம்
சின்ன துண்டு இஞ்சி
2 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம்
1 கேரட் துருவியது
கால் கப் துருவிய தேங்காய்
கொத்தமல்லி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, ரவை, சோடா உப்பு சேர்த்து கிளரவும். அடுப்பில் பாத்திரம் வைத்து, இந்த மாவை சேர்த்து கிளரவேண்டும். மீதமான சூட்டில் கிளர வேண்டும். நன்றாக வெந்ததும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும், கடலை பருப்பு, சீரகம், இஞ்சி , வெங்காயம், துருவிய கேரட், தேங்காய் துருவல் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து இதை மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி, இதை வைத்து அவித்து எடுக்க வேண்டும்.