Advertisment

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரே நாளில் வீட்டை அலங்கரிப்பது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக வீட்டி எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
krishna jayanthi images

krishna jayanthi images

krishna jayanthi images: சிறுவரும் சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும் வேடமணிய, பிஞ்சி குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, கோலாட்டம் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்த, பெற்றோர்களும், பெரியோர்களும், இதனை இனிப்பு பலகாரங்களோடு கண்டு ஆனந்தம் கொள்ள, கோலாகலமாக கொண்டாட்டம் நிறைந்திருக்கும் ஜன்மாஷ்டமி என்னும், கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) பண்டிகை அனைத்து வீடுகளிலும் ஒரு எதிர் பார்க்கும் பண்டிகையாக அமைகின்றத.

Advertisment

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி என்பது விஷ்ணு பிறந்த நாள் ஆகும். இந்த விஷ்ணுவை கிருஷ்ணன், கண்ணன் போன்ற பல பெயர்களில் அழைப்பார்கள். மேலும் இந்நாளன்று வீட்டில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணனாக நினைத்து, அவர்களுக்கு கண்ணன் போன்று அலங்காரம் செய்து விடுவார்கள்.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள கிருஷ்ணன் சிலையை பலவாறு வித்தியாசமாக அலங்கரிக்கலாம். இதனால் வீட்டிற்கு வருபவர் அனைவரிடமும் நல்ல பாராட்டுக்களை பெறுவதோடு, வீட்டிற்கு வரும் கிருஷ்ணனும் சந்தோஷப்படுவார்.இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக வீட்டி எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என தெரிந்துக் கொள்வே வாருங்கள்.

1. ஊஞ்சல் அலங்காரம்:

கிருஷ்ண ஜெயந்தியில் நம் வீட்டு பூஜையில் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பது ஊஞ்சல் தான். ராதையும் கிருஷ்ணாவையும் ஊஞ்சலில் அமர வைத்து மெளன ராகம் பாடுவார்கள். அப்படி உங்களின் வீட்டில் இருக்கும் ஊஞ்சலை அழங்குப்படுத்த இந்த வீடியோவை பாருங்கள்.

2. கிருஷ்ணன் தொட்டில்:

கிருஷ்ணனுக்கு தொட்டில் என்றால் அலாதி பிரியம். அவரை அவளின் அம்மா யசோதை எப்போதுமே தொட்டிலில் வைத்து தான் தாலாட்டுவார். சிலர் அதை நினைவுப்படுத்தும் விதமாக வீடுகளில் தொட்டில் கிருஷ்ணரை அமர வைப்பார்கள். அப்படி தொட்டில் செய்யவில்லை என்றால் இதைப் பார்க்த்து எளிமையாக செய்யுங்கள்.

3. மயில் அலங்காரம்:

மயில் தோகை கிருஷ்ணனுக்கு உயிர். வீட்டில் வைத்தாலும் மிகவும் நல்லது. அப்படியொரு மிகச் சிறந்த மயில் அலங்காரத்தை வீட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமாக இருக்கும்.

4. கிருஷ்ணன் ராதை ஊஞ்சல்:

கிருஷ்ணன் ராதை ஊஞ்சல் கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய ஒன்று. இதை தேடி அலைய வேண்டாம். நீங்களே வீட்டில் செய்யலாம். அதற்கு இந்த வீடியோ உபயோகமாக இருக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment