ஒரு முறை குதிரைவாலி கீர் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி 1 கப்
அரை லிட்டர் பால்
2 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் முந்திரி பருப்பு
1 ஸ்பூன் பாதாம்
1 ஸ்பூன் பிஸ்தா பருப்பு
1 கப் குதிரவால் அரிசி
கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
1 ½ கப் சர்க்கரை
கொஞ்சம் குங்குமப்பூ
செய்முறை : ஒரு பாத்திரத்தில், பாலை சேர்த்து கொதிக்க வைகக்வும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து குதிரைவாலி அரிசியை சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை பாலில் சேர்க்கவும். தொடர்ந்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு சேர்த்து வறுத்துகொள்ளவும். தொடர்ந்து கொதிக்கும் பாலில் சர்க்க்ரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் நட்ஸ் சேர்க்கவும். கடைசியாக ஜாதிக்காய் பொடி சேர்த்து கிளரவும். பரிமாறும் போது குங்குமப் பூ சேர்த்து கிளரவும்.