சிறுதானியங்கள் உடலுக்கு அத்தனை ஆரோக்கியத்தை கொடுக்கும். சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி அரசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துகளும் இதில் நிறைந்துள்ளது. இதில் ருசியான தோசை செய்து சாப்பிடுவது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி – 1 கப்
துவரம் பருப்பு- அரை கப்
கடலைப் பருப்பு- அரை கப்
கேரட் துருவல் -1 கப்
சிகப்பு மிளகாய் – 5
பெருங்காயம்- சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் – கால் கப்
கறிவேப்பிலை, முருங்கை இலை – கால் கப்
உப்பு – தேவையான அளவு
சோம்புத்தூள் – 1 சிட்டிகை
செய்முறை
முதலில் அரிசி, பருப்பு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதோடு சிகப்பு மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். வேண்டும் என்றால் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றவும். பின் சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விடவும். இருபுறமும் வெந்து வந்தவுடன் எடுக்கவும். அவ்வளவு தான் சத்து நிறைந்த குதிரைவாலி தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“