Kuzhambu Recipe, Cucumber Kuzhambu Making Tamil Video: நம் வீட்டு அருகில் மிக எளிமையாக கிடைக்கிற ஒரு காய்கறி, வெள்ளரிக்காய். இதன் பலன்களை சொல்லித் தெரியவேண்டியதில்லை. உடல் குளிர்ச்சிக்கும் சரும பாதுகாப்புக்கும் வெள்ளரிக்காய் அவ்வளவு நல்லது.
Advertisment
வெள்ளரிக்காயை பயன்படுத்தி சாம்பார், கூட்டு, குழம்பு என விதவிதமாக சமைக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் உணவுதான் இது. தவிர, வெள்ளரிக்காயை பயன்படுத்தி சமைப்பது சுலபமானது. வெள்ளரிக்காய் குழம்பு செய்வது எப்படி? என்பதை இங்கு பார்க்கலாம்.
Cucumber Kuzhambu Making Tamil Video: வெள்ளரிக்காய் குழம்பு
வெள்ளரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய்- 1, புளி தண்ணீர் - 1 கப், வெல்லம் - 1 டீ ஸ்பூன், மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன், உப்பு, எண்ணெய்
தாளிக்க: எண்ணெய் - 1 டீ ஸ்பூன், கடுகு - 1 டீ ஸ்பூன், உளுந்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன், கருவேப்பிலை - சிறிதளவு
வெள்ளரிக்காய் குழம்பு செய்முறை :
முதலில் வெள்ளரிக்காயை தோலை நீக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் வைத்து 1 விசில் வரும்வரை வேக வைக்கவும். பின்னர் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை 2 நிமிடங்களுக்கு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு ஆறவைத்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து வாணலியில் புளித்தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த பேஸ்டை சேர்த்து கொதிக்கவிடுங்கள். மஞ்சள், உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் வேக வைத்த வெள்ளரியை தண்ணீரோடு சேருங்கள். வெல்லத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். கடைசியாக வாணலி வைத்து எண்ணெய், கடுகு தாளித்து குழம்பில் ஊற்றவும். இப்போது சுவையான வெள்ளரிக்காய் குழம்பு தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"