Laddu Making in Tamil, Laddu Sweet Recipe Tamil Video: வீட்டு விஷேசம், விருந்து, என அனைத்திலும் லட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு. இனிப்பு வகைகளில் லட்டிற்கு தனி ஃபேன்ஸ் இருக்கிறார்கள். இது போன்ற பேண்டமிக் சூழலில் லட்டு, கடையில் சென்று வாங்குவது அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது. அதனால் என்ன? வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.
ஏன் முடியாது? பூந்தி லட்டுகளை வீட்டில் செய்வது மிகச் சுலபம். எளிமையான முறையில் வீட்டில் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Laddu Sweet Recipe Tamil Video: பூந்தி லட்டு செய்வது எப்படி?
பூந்தி லட்டு செய்யத் தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப், வனஸ்பதி – 2 டீஸ்பூன், சர்க்கரை – 3 கப்,
தண்ணீர் – ஒன்றரை கப், பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஃபுட் கலர் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
லட்டு செய்யும் முறை :
முதலில் சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும். கடலை மாவுடன் வனஸ்பதியை சேர்த்துப் பிசையுங்கள். அதனுடன் ஃபுட் கலர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும். பிறகு மாவை ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும். இதை பொன்னிறமாகப் பொரித்து, உடனேயே சர்க்கரைப் பாகில் போடுங்கள்.
பாகிலிருந்து பூந்திகளை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து லட்டு பிடிக்கவும். இப்போது சுவையான சத்தான பூந்தி லட்டு ரெடி.
உங்க குட்டீஸை அசத்தக் கிளம்பிட்டீங்களா?