அரிசி மாவு வைத்து ஒரு சூப்பரான ஸ்வீட் செய்ய முடியும். ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி மாவு
முக்கால் கப் பால்
1 கப் சர்க்கரை
முக்கால் கப் தேங்காய் துருவல்
நெய் 2 ஸ்பூன்
பாதாம் 2 ஸ்பூன்
கருப்பு எள்ளு 3 ஸ்பூன்
திராட்சை 1 ஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து கொள்ளவும். அதை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சக்கரை சேர்த்து கிளரவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும், தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து மூடி போட்டு மூடவும். இனியொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் பாதாம் பருப்பு, கருப்பு எள்ளு, திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும். இந்நிலையில் இதை அரிசி மாவுடன் சேர்த்து கிளரவும். தொடர்ந்து லட்டு போல் பிடித்துகொள்ளவும். இதை நாம் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“