சுத்தமாக எண்ணெய் தேவையில்லை. பூந்தியையும் பொறிக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இப்படி செய்தால் சுவையான லட்டு ரெடி.
தேவையன பொருட்கள்
100 கிராம் கடலை பருப்பு
முந்திரி 8
3 டேபிள் ஸ்பூன் நெய்
1 கப் சர்க்கரை
அரை கப் தண்ணீர்
செய்முறை : முதலில் கடலை பருப்பு நன்றாக கழுவி, தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும். தொடர்ந்து இதில் நாம் நெய்யில் பிரட்டிய மாவை சேர்த்து கிளரவும். ஒரே நேரத்தில் சேர்க்காமல், மெதுவாக சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதில் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளரி லட்டு பிடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“