இனி வெண்டைக்காய் வாங்குனா, இப்படி பொறியல் செய்யுங்க. ருசி சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் 2 கப்
1 கப் வறுத்த வேர்கடலை
4 வத்தல்
1 ஸ்பூன் சீரகம்
எண்ணெய்
கடுகு
4 பச்சை மிளகாய்
8 பல் பூண்டு
கருவேப்பிலை
1 வெங்காயம்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மல்லிப் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை : வெண்டைக்காய்யை நீளமாக நறுக்க வேண்டும். மிக்ஸியில் வேர்கடலை, வத்தல், சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், பூண்டு கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெண்டைக்காய்யை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“