Advertisment

வெண்டைக்காயில் பக்கோடா செய்ய முடியுமா? - அட இப்படி செஞ்சு தான் பாருங்களேன்

கடலைமாவு, அரிசிமாவு மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து மொருமொருப்பான வெண்டைக்காய் 65 தயாரிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lady finger pakoda preparation tips - வெண்டைக்காய் பக்கோடா செய்ய முடியுமா? - அட இப்படி செஞ்சு தான் பாருங்களேன்

lady finger pakoda preparation tips - வெண்டைக்காய் பக்கோடா செய்ய முடியுமா? - அட இப்படி செஞ்சு தான் பாருங்களேன்

எல்லா பருவ காலத்திலும் கிடைக்கக்கூடியது வெண்டைக்காய்.

Advertisment

பலருக்கு வெண்டைக்காய் புளிக்குழம்பு மற்றும் பொரியல் பிடிக்கும். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபகத்திறன் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல் நீங்கும்.  எனவே வெண்டைக்காயில் ருசியான பக்கோடா எப்படி செய்வதென்று பார்க்கலாம். கடலைமாவு, அரிசிமாவு மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து மொருமொருப்பான வெண்டைக்காய் 65 தயாரிக்கலாம். வெண்டைக்காய் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1/2 துண்டு

பூண்டு - 6-7 பற்கள்

பச்சை மிளகாய் - 4-5

வெண்டைக்காய் - 250 கிராம்

கடலைமாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மிளகாய் தூள் - 11/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ளதை பொரித்தெடுக்கவும். பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் சாட் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment