சப்பாத்தி போட்ட கல்லில் தோசை வரலையா? வெண்டையின் இந்தப் பகுதியை இப்படி தேய்ச்சு பாருங்க!

இரும்பு பாத்திரங்களில் சமைப்பது, உணவில் இயற்கையாக இரும்பு சேர்க்கப்படுகிறது. இது இரத்தச் செல்கள் உற்பத்திக்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.

இரும்பு பாத்திரங்களில் சமைப்பது, உணவில் இயற்கையாக இரும்பு சேர்க்கப்படுகிறது. இது இரத்தச் செல்கள் உற்பத்திக்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-07T190210.796

இன்றைய துரிதமான வாழ்க்கை மாறுவதோடு, உணவுப் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. சிறந்த ஆரோக்கியத்திற்காக பலர் பழைய தலைமுறையின் பாரம்பரியங்களை மீண்டும் ஏற்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமான ஒன்றாக இரும்பு தோசைக் கல் கருதப்படுகிறது. ஹோட்டல் ஸ்டைல் தோசைகளை வீட்டில் செய்ய மட்டுமல்ல, இது உங்கள் உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளை தரும் ஒரு மருத்துவம் எனக் கூட சொல்லலாம். 

Advertisment

dosa tawa

இரும்பு தோசைக் கல்லின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:

இரும்புச்சத்து அதிகரிப்பு

இரும்பு பாத்திரங்களில் சமைப்பது, உணவில் இயற்கையாக இரும்பு சேர்க்கப்படுகிறது. இது இரத்தச் செல்கள் உற்பத்திக்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

ஹார்மோன் சமநிலை

இரும்புச்சத்து நல்ல முறையில் கிடைத்தால், பெண்களில் ஹார்மோன்கள் நிலையான நிலையில் இயங்கும். மாதவிடாய் கால சீர்கேடுகள், சூழ்நிலை மாற்றத்தால் ஏற்படும் சோர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.

பிளாஸ்டிக், கேமிக்கல் பூச்சுகளை தவிர்க்கலாம்

நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் non-stick தோசைக் கல்லில் டேபிளான் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இது அதிக வெப்பத்தில் வெளியேறும் போது உடலுக்கு நச்சு அளிக்கக்கூடும். ஆனால் கஸ்ட் இரும்பு தோசைக் கல்லில் எந்தவிதப் பிளாஸ்டிக் பூச்சும் இல்லை.

Advertisment
Advertisements

கடுக்கும், மிருதுவாகும் தோசைகள்

தோசைகள் நன்றாகச் சுடும், நிறமும், வாசனையும் சப்டாக வரும். தோசையின் சுற்று பக்கங்கள் க்ரிஸ்பி ஆகவும் நடுப் பகுதி மென்மையாகவும் இருக்கும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் விதமாக இருக்கும்.

தீயில் சமநிலை வெப்பம் பரவுதல்

இரும்பு தோசைக் கல்லில் வெப்பம் சமமாக பரவுகிறது. இதனால் சமையல் நேரம் குறையும், எண்ணெய் தேவை குறையும். இந்த சிறப்பு non-stick பான்களிடம் இல்லை.

நீடித்த ஆயுளுடன் கூடிய பொருள்

ஒன்றை வாங்கினால் பல்வீன் வருடங்கள் பயன்படுத்தலாம். சரியான பராமரிப்பு செய்தால், தலைமுறைகள் பாவிக்கும் நிலை வரும். இது இன்வெஸ்ட்மென்ட் மாதிரி தான்!

ஒரு சிம்பிள் டிப்!

இத்தனை பயனுள்ள இந்த இரும்பு தோசை கல்லில் சில நேரங்களில் தோசை ஒட்டி ஒட்டி வரும். அப்போது வெங்கயாத்தை வெட்டி எண்ணையில் வறுத்து பயணப்படுத்துவீர்கள் ஒரு சிலர். ஆனால் அப்படி வெங்காயத்தை வீணாக்காமல் வெண்டைக்காயின் காம்பு பகுதி ஒன்றை வைத்து இந்த பிரெச்சனையை தீர்க்கலாம்.

okra

சப்பாத்தி போட்டுவிட்டு பிறகு தோசை ஊற்றும் போது அது வரவில்லை என்றால், அந்த கல்லில் வெண்டைக்காயின் காம்பை எடுத்து கல்லில் நன்கு தேய்த்து பிறகு தோசை ஊற்றினால் நன்கு முறுகலாக வரும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: