பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றார். அந்த அழகிய தீவின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். அவரது பயணத்தால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும்...
லட்சத் தீவு என்றால் லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று பொருள். ஆனால் இருப்பது 36 தான். அதிலும் மக்கள் வசிப்பது தீவுகளில்தான். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்- லக்காதீவ் மலைத்தொடரின் வெளியில் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள். உண்மையிலேயே இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் அதை சொர்க்க பூமி என்றே சொல்லலாம்.
கவரத்தியை தலைமையிடமாக கொண்ட இந்த தீவில் அகத்தி,அமினி, கட்மத், அந்த்ரூத், மினிகாய், கில்தான், சேத்லத், பித்ரா உள்ளிட்ட 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை மிகவும் குறைவு தான்.
எப்படி செல்வது?
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அதுவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை இயக்குகிறது. கொச்சி-அகத்தி, அகத்தி-கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி பயணதத்தால் இந்தியர்கள் மட்டுமல்லாது சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் லட்சத்தீவு பயணத்தை எளிமையாக்குவதற்காக மின்னணு நுழைவுச் சீட்டு இனி முற்றிலும் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் லட்சத்தீவு செல்ல வங்கியில் ரூ.200 ஐ செலுத்திவிட்டுஅதற்கான சலானை சமர்ப்பித்து நுழைவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இப்போது இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நுழைவுச் சீட்டு கிடைத்துவிடும்.
மேலும் எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன. அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து முதல் மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் லட்சத்தீவு சுற்றுலா துறை மிகப்பெரிய அளவில் ஊக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் லட்சத்தீவுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“