தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோயில் சென்று வழிபட்டு பட்டாசு வெடித்து மகிழ்வர். தீபாவளி பண்டிகை இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந் நன்நாளில் கடவுள் பக்தியுடன் வீட்டில் பூஜை செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும் என்பது ஐதீகம். குறிப்பாக லட்சுமி குபேர பூஜை செய்வது அவ்வளவு சிறப்பு தரும்.
லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும் முறையாகும். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும், செல்வ வளம் பெருகும், சகல ஐஸ்வர்யமும் பெருகும் என்பது ஐதீகம்.
அதே வேளையில் தீபாவளி நாளில், நல்லெண்ணை குளியல் கங்கா ஸ்நானம் எனச் சொல்லப்படுகிறது. நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமா தேவியும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகா விஷ்ணுவும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதீகம். எனவே தான் தீபாவளி நாளில், இதை செய்வது விஷேமாக கூறப்படுகிறது.
லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9.13 மணி முதல் 10.43 மணி வரை
பிற்பகல் 1.13 மணி முதல் 1.28 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“